மட்டக்களப்பை சேர்ந்த 5 வயது பாஸ்கரன் ஷஸ்வின் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்தார்

 


 





 





































 

 ஐந்து நிமிடங்களுக்குள் 150 பொது அறிவுக்கேள்விகளுக்கு பதிலளித்து , மட்டக்களப்பை சேர்ந்த 5 வயது பாஸ்கரன் ஷஸ்வின் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்தார் .

இவ் நிகழ்வுக்கு மாகாணப்பணிப்பாளர் சமூக சேவைகள் திணைக்களம் திரு .சிவராசா முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்தார் .

 புதிய சந்தர்ப்பங்கள் அமைப்பின் பணிப்பாளர் பாடசாலை அதிபர் திரு.சா. சுதாகரன், கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஆலோசகரும் பாடசாலை அதிபர் திரு ஆ. குலேந்திர ராசா சிறப்பு விருந்தினர்களாகவும்,

  மட்/சென்மேரிஸ் சர்வதேச பாடசாலை அதிபர் திருமதி. ராஜினி பிரான்சிஸ் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் வருகை தந்த  அதிதிகளுக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு, கதிரவன், மற்றும் திரு .அ.அன்பழகன் குருஸ் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், அதிதிகள் உரைகள் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் சிறப்பு நடுவர்களாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் தலைவர் சிவ. வரத கரன் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் செயற்குழு  உறுப்பினர் கவிஞர் அ.தனுறாஜ், கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆலோசகர் கதிரவன், திரு அன்பழகன் குருஸ் நிகழ்வின் இறுதியில் நன்றியுரை வழங்கிச் சென்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெகதீஸ்வரன்,  இதில் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.