ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு நிருபர்
மட்டக்களப்பு
சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளினால் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின்
அறுவடை விழா சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலையில் நடைபெற்றது.
சிறைச்சாலைக்குச்
சொந்தமான திருப்பெருந்துறையிலுள்ள காணியில் சுமார் 18 ஏக்கர்
நிலப்பரப்பில் இவ் வேளான்மை செய்கை பண்ணப்பட்டிருந்தது.
கடந்த வருடம்
ஒக்டோபர் மாதம் 26ம் திகதி விதைப்புச் செய்யப்பட்ட இச்செய்கையின் மூலம்
ஏக்கர் ஒன்றிற்கு 15 மூடைகள் எதிர்பார்க்கப்படுவதாக சிறைச்சாலை
அத்தியட்சகர் தெரிவித்தார்.
இயற்கை முறையில் செய்கை பண்ணப்பட்டிருந்த குறித்த நெற்செய்கை சிறந்த விளைச்சலைத் தந்திருப்பதாக சிறைச்சாலை அ.தியட்சகர் தெரிவித்தார்.
பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து இவ்வேளான்மை அறுவடை விழா இடம் பெற்றது.
சிறைச்சாலை அதிகாரிகள் மாவட்ட கமத்தொழில் அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.