மட்டக்களப்பில் ஆணிவேர் உற்பத்திகள் நிறுவனத்தின் 2வது வருட நிறைவு விழா-2025

 

 



 
















மட்டக்களப்பில் ஆணிவேர் உற்பத்திகள் நிறுவனத்தின் 2வது வருட நிறைவு விழா இன்று இடம்பெற்றது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் திறந்த அழை ப்பு வழங்கப்பட்டிருந்தது. வருகை தந்த அனைவருக்கும் இலைக் கஞ்சி, குரக்கன் பேரீச்சை தின்பண்டம் என்பன இலவசமாக சுவைக்க வழங்கப்பட்டது.

இலங்கையின் முதலாவது சிறுதானிய உணவகமான இது 2000வருடங்கள் பழமை மிக்க சிறுதானியங்களை தற்போதய தலைமுறைக்கு மீள அறிமுகப்படுத்தி சிறுதானிய உணவுகளையும் பெறுமதி சேர்க்கப்பட்ட சிறுதானிய உலர் பொதிகளையும்  நாடு முழுவதும் Cash on Delivery, மற்றும் Daraz விற்பனைத் தளம் ஊடாக விற்பனை செய்து வருகிறது. 

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மக்களும் இப்பொதிகளை விரும்பி கொள்வனவு செய்வது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கத்தினால் தற்போதைய சமூகத்தில் மிகப்பெரிய சவாலாக உள்ள தொற்றாத வாழ்வியல் வியாதிகளை குறைப்பதை பிரதான இலக்காக கொண்டு  இயங்கி வரும் வரும் இந் நிறுவனமானது சூழலுடன் இயைந்த பொதியிடலை கடைப்பிடித்து வருவது குறிப்பிடத் தக்கது.