உள சமூக மேம்பாட்டுத் திட்டத்திற்கான தூர நோக்கு சிந்தனை தொடர்பான திட்டமிடல் நிகழ்வு- கல்லடி மட்டக்களப்பு .2025.02.02



உளவியல் மற்றும் உளவளத்துணை உயர் டிப்ளோமா பாடநெறி ஆரம்ப கற்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் இடம்பெற்றது.


மட்டக்களப்பு கல்லடி வேலூரில் அமைந்துள்ள சர்வதேச உளவியல் சார் கற்கைகள் நிலையத்தில் இன்று (02) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் இரண்டு வருட கற்கை நெறி நிறைவை முன்னிட்டு உளவியல் சார்ந்த மாணவர்களின் ஏற்பாட்டில்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஜி.கே அப்துல்லாஹ் மற்றும் கௌரவ விருந்தினர்களாக ஐ. எம் .யு பல்கலைக்கழக இலங்கைக்கான கல்வி விவகார மற்றும் கலாச்சார விவகாரத்தின் தலைவர்களான ஏ. எம்.பர்வான் ,ஃபஹீர் முகமது ,சிறப்பு விருந்தினராக கிராம சேவை உத்தியோஸ்தர் ஜீவிதா வேந்தன், முன்னாள் மாநகரசபை சபை உறுப்பினர் சுபராஜ் ஆகியோர் கலந்து கொண்டதோடு அதிதிகளுக்கான நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.