மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் மேம்பாட்டிற்கான விளையாட்டு விழா - 2025






 



















மட்டக்களப்பு  மாவட்டத்தின் 14 பிரதேச செயலக சிறுவர் கழக உறுப்பினர்களின் செயற்திறனை உக்கப்படுத்து வதற்கான விளையாட்டுப் போட்டியானது மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் (08) திகதி இடம் பெற்றது.

மாவட்ட செயலகதின்  ஏற்பாட்டில் யுனிசெப் நிறுவனத்தின்  நிதி அனுசரணையுடன் செரி (CERI) நிறுவனத்தின் விளையாட்டின் ஊடான விருத்தி திட்டத்தின் கீழ் ஒரு நாள் விளையாட்டு  பயிற்சி நிகழ்வானது  சிறார்களுக்கு வழங்கப்பட்டது.

 14 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 700 சிறுவர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு கிறிக்கெட், கால்பந்து, வலைப்பந்து, கரப்பந்து மற்றும் கரம் ஆகிய விளையாட்டுக்கள் தொடர்பான பயிற்சிகள், நுட்பங்களை தேசிய ரீதியில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களை கொண்டு வழங்கி வைக்கப்பட்டது.

 கிராமிய விளையாட்டுக்கள் தொடர்பான பயிற்சிகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில்   உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவனின், மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களின் விளையாட்டுக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர்கள்,
மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரி.மதிராஜ்,
செரி நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் வி.தர்ஷன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.