புதியபாதையில் மட்டு இந்துவின் பழையமாணவர்சங்கம்-2025

 





















































மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 79 ஆவது ஆண்டினைச் சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்கமானது அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் அமுல்படுத்தப்பட்ட Clean Sri Lanka செயற்றிடத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மாசற்றமாநகரம் என்றதொனிப்பொருளில் 2025.02.01 அன்று மட்டக்களப் பு நாவலடி கடற்கரையினை சுத்தம்செய்யும் நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தது. மேற்படி நிகழ்வினை SPM Foundation, மட்டக்களப்பு மாநகரசபை ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்படி நிகழ்வில் கல்லூரியின் பழையமாணவர்கள் பாடசாலை சமூகம் SPM Foundation பிரதிநிதிகள் மாநகரசபை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.