உதயகிரி.
மட்டக்களப்பு விவேகானந்தா மகளீர் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் திருமதி நவகீத்தா தர்மசீலன் தலைமையில் கல்லடி- உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (22) இடம் பெற்றது.
பாடசாலை மாணவிகளின் பாண்டு வாத்திய இசை முழங்க, அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம், பாடசாலைகீதம், இசைத்து மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
பிரதம விருந்தினராக மட்டக்களப்பு கல்வி வலைய கல்வி அபிவிருத்தி பிரதி கல்வி பணிப்பாளர் நிதர்ஷினி மகேந்திரகுமார் விசேட விருந்தினராகவும், கௌரவ விருந்தினர்களாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆர் ஜே. பிரபாகரன் , வைத்தியர் ஸ்ரீஹரநாதன் , எந்திரி மங்களேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர் .
இதன் போது அதிதிகளுக்கு மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றியிட்டிய மாணவர்களுக்கும் இல்லங்களுக்கும் வெற்றிக் கிண்ணங்களும், சான்றிதழ்களும் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் முதலாம் இடத்தினை சாரதா இல்லமும், அவபாமியா இல்லம் 2ம் இடத்தையும் நிவேதிதா இல்லம் 3ம் இடத்தையும் பெற்றுள்ளது .