மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளுக்கு மாபெரும் தொழில் சந்தை - 2025
















மட்டக்களப்பில்  இளைஞர் யுவதிகளுக்கு   மாபெரும் தொழில் சந்தை  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் தலைமையில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்று (08) இடம் பெற்றது.

 மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் பிரதேச தொழிற் சந்தை இடம் பெற்றது.

இந் மாபெரும் தொழிற் சந்தையில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழங்கும்  நிறுவனங்களுடன் நேரடியாக கலந்துரையாடும்  சந்தர்ப்பம் எற்படுத்திக் கொடுக்கப்பட்டது .
 
தொழில் சந்தையில் பல தனியார்துறை நிறுவனங்கள் இனங்காணப்பட்ட பல தொழில் வாய்ப்புக்களுடன் கலந்து கொண்டு நேர்முகத் தேர்வில் சித்தி பெற்றவர்களை தமது நிறுவனங்களில் இணைத்துக் கொண்டனர்.

இதன் போது அதிகமான இளைஞர் யுவதிகள்  ஆர்வத்துடன் தொழில் சந்தையில் பங்கு பற்றி தமது தகைமைக்கொற்றவாறு  புதிய தொழிலை பெற்றுக்கொண்டனர்.
 
 இந் நிகழ்வில்  கிழக்கிழங்கை தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் அருட்பணி சொலமன்ராஜ், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின்  மாவட்ட இணைப்பாளர் வி.மைக்கல் கொலின்,  சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர், மண்முனை வடக்கு பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தெய்வேத்திகுமார் புஸ்பாகரன் மினாம்பிகை மகேசன் என பலர் கலந்து கொண்டனர்.