மட் பட் உதயபுரம் தமிழ் வித்யாலயத்தில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ் 2025.


 


 

 








மட்/ பட். உதயபுரம் தமிழ் வித்யாலயத்தில் இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் திரு கோகுல்ராஜ் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை கல்வி அபிவிருத்தி குழுவின் காப்பாளர் நடராசா சச்சிதானந்தம் ,(லண்டன்) அவர்கள் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும் , அத்துடன் வலைய கல்வி அலுவலக பாடசாலை இணைப்பாளர் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 பாடசாலை ஒன்று கூட மண்டபத்தில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகிதுடன் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.   அத்துடன் தரம் ஒன்றுக்கு புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.   தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஐயா சச்சிதானந்தம் அவர்களின் விசேட உரை இடம்பெற்றது.

 இவ்வுலகில் எமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி இன்றியமையாதது என்றும் செயற்கை தொழில்நுட்பம் தற்காலத்தில் அதிக அளவில் பேசும் பொருளாகவும் அதன் வளர்ச்சி உச்சநிலையை அடைந்துள்ளது.

 என்றும் இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின்  கற்றல் செயல்பாடுகள் சுய ஆக்கத்துடன் ஆளுமை உடையதாகவும் வளர்ச்சி அடைய வேண்டும்.

 அதற்கு ஆசிரியர்கள் பெற்றோர்களும் தங்களின் அளப்பெரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற பல கருத்துக்களை முன்வைத்தார்.

 ஐயா சச்சிதானந்தம் அவர்கள் இப்பாடசாலைக்கு பல தொண்டு நிறுவனங்களின் தொடர்புகளை ஏற்படுத்தி பாடசாலையின் பெளதீகவள அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றியவர்  என பாடசாலை சமூகத்தினர் ஐயாவை மனதார வாழ்த்தி இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டனர் அத்துடன் நன்றியுரை யுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது.