மட்டக்களப்பு பயனியர் வீதி மதர் கெயார் முன்பள்ளி பாடசாலையின் சுதந்திர தின நிகழ்வு .2025

 

 

 






நாட்டின் 77வது சுதந்திர தின நிகழ்வினை மட்டக்களப்பு பயனியர் வீதியில் அமைந்துள்ள Mother's care
Montessori school ஆசிரியர்களும், சிறார்களும் மற்றும் பெற்றோர்களும் கொண்டாடினர்.

இந்தப் பாடசாலையின் தலைமை ஆசிரியையான திருமதி. டிலானி ஆசிரியை நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி வைத்து இந்த நிகழ்வை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து அப்பாடசாலையின் மாணவர்களும் ஆசிரியர்களும் சகிதம் சுதந்திர தின விழா நடைபெற்று முடிந்தது.

இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் மாணவர்கள் அனைவரும் கலாச்சார உடையில் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகவும், எதிர்கால சின்ன சிறார்களுக்கு ஒரு முன்னோட்டமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.