2025.02.08 நேற்றைய தினம் சுவாமி விபுலானந்தா இசைநடன கல்லூரி இராஜதுரை அரங்கில் புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி குகதாஸ் தலைமையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பயிற்சி நிலையத்தில் பயிற்சியினை NVQ தரத்தில் பூர்த்தி செய்த அழகுக்கலை,கணனி பயிற்சி, விவசாயப்பயிற்சி மற்றும் தையல் பயிற்சி ஆகியவற்றிற்கான சான்றிதழ்களும் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண பணிப்பாளர் H .U சுசந்த மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி. நிசாந்தி அருள்மொழி மாகாண பணிமனை உதவிப்பணிப்பாளர் ஜனாப் முபாறக்கலி.மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் திரு.மா.சசிக்குமார், திருமதி.கி.சதீஸ்வரி, திரு.அ.தயாசீலன், ஓட்டமாவடி பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் A.M கனீபா உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான இவ் சான்றிதழ்களை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.