வரதன்
புதிய அரசாங்கத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் திருமதி சத்யா நந்தினி நமசிவாயம்
ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் கந்தசாமி பிரபு தலைமையில் தலைமையில் இடம்பெற்றது.
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீ நேசன் வைத்தியர் இ ஸ்ரீநாத் பாராளுமன்ற உறுப்பினர் முகமட் நலீம் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் போலீஸ் நிலைய உயர் அதிகாரி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பொதுமக்கள் என பலரும் இந்த பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்டனர்
புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப் பட்டு வரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட நெல்கொள்வளவு மற்றும் அஸ்வஸ்மா கொடுப்பனவுகள் அரசாங்கத்தின் நவீன மயப்படுத்தப்பட்ட வேலைகள் படி சாராயம் காட்டுயானைத் தாக்கம், சட்டவிரோத மண் அகழ்வு, கல்வி அபிவிருத்தி, சுகாதாரம் , போக்குவரத்து என பலதரப்பட்ட விடயங்கள் இங்கு ஆராயப்பட்டு தீர்வுகளும் காணப்பட்டது