இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,  285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது .

 


77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,  285 கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பொது மன்னிப்புக்கு தகுதியுடைய 279 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.