இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கொடியேற்ற நிகழ்வும் அலுவலக முன்றலில் புதிதாக நிர்மணிக்க பட்ட அலுவலக பெயர் பலகை திரை நீக்கமும் இடம் பெற்றது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியான திருமதி.பாமினி அச்சுதன் தலைமையில் இடம்பெற்ற தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியக்கீதம் இசைக்கப்பட்டது.
அத்துடன் தேசத்தைக்கட்டி எழுப்ப ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பிலும் அதற்கு நாம் ஆற்ற வேண்டிய கடப்பாடு தொடர்பிலும் வைத்திய அதிகாரினால் தெளிவூட்டப்பட்டது
அத்தோடு இந் நிகழ்வில் அலுவலகத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்றவர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு பிரியாவிடை நினைவு பரிசுகளும் வைத்திய அதிகாரியினால் வழங்கப்பட்டது.
அத்துடன் அலுவலகத்தில் பெயர் பலகை மற்றும் கொடியேற்றுவதற்கான கட்டிடப் பொருட்களை இலவசமாக வழங்கி அலுவலகத்திற்கு உதவி புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு இதனை மிகவும் திறன்பட முன் நின்று செய்து முடித்த அலுவலக சாரதி கோ.கோபாலகிருஸ்ணன், அவருடன் உதவி புரிந்த உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜவ்பர் ஆகியோருக்கு நினைவு சின்னம் வழங்கபப்ட்டதுடன் அதனை மேற்பார்வையிட்டு மிகவும் சிறந்த முறையில் செய்த அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கவிதாஸ் துர்ஷாந்தினி அத்தோடு அலுவலக உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு பாராட்டும் நன்றியும் வைத்திய அதிகாரி பாமினி அச்சுதன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வைத்திய துறையினை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்