ஆசிரியர்களுக்கான அட்லஸ் பிளஸ் மற்றும் மனப்பாங்கு மாற்றத்தை நோக்கிய பயிற்சி நெறி Action Unity Lanka நிறுவனத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .



கடந்த 2025.02.26ம் திகதி அக்கரைப்பற்று வலயக் கல்விக்குட்பட்ட ஒலுவில் அல் - ஹம்றா வித்தியாலய தேசிய பாடசாலை மண்டபத்தில் மேற்படி பயிற்சி நெறியின் அக்குராப்பண நிகழ்வு Action Unity Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி K. கஜேந்திரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இவ் நிகழ்விற்கு கோட்டக் கல்வி அதிகாரி M. H. M. றஷ்மி,  A. L. பாயிஸ் (ATLAS பயிற்றுவிப்பாளர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்-முன்பள்ளி) மற்றும் பொத்துவில், அட்டாளச்சேனை ஆகிய வலயங்களைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர்களும், AU Lanka நிறுவனத்தின் கல்விப் பிரிவு திட்ட இணைப்பாளர் ஜெகன் ராஜரெட்ணம் மற்றும் பாறுக் நஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் செயற்திறன் மிக்க கற்றல் கற்பித்தல் அணுகு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு பல நேர் சிந்தனை மாற்றங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் அண்மைக் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு. மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்பு, கல்முனை, சம்மாந்துறை, திருக்கோயில் மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயங்களை மையப்படுத்தி ChildFund Sri Lanka நிறுவனத்தின் பாரிய நிதிப் பங்களிப்பில் AU Lanka நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. இப் பயிற்சி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேன்படுத்தி அதன் மூலம் மாணவர்களின் மகிழ்சியான கற்றல் சூழலை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாகும்.
கோட்டக் கல்வி அதிகாரி M. H. M. றஷ்மி தனது உரையில் “AU Lanka மற்றும் ChildFund Sri Lanka நிறுவனத்தின் பங்களிப்புக்கள் பாராட்டத்தக்கது. செயற்திறன் மிக்க கற்றல் கற்பித்தல் அணுகு முறை மூலமாக பல மாற்றங்களை அக்கரைப்பற்று கல்வி வலயம் பெற்றிருக்கின்றது. முன்னைய பயிற்சிகளில் குறிப்பிட்ட ஆசிரியர்களே பங்குபற்றினர். பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் நுட்ப முறைகளை அவர்களது பாடசாலைமட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். இதற்கு எமது வளவாளர்கள் பெரிதும் உதவினர். அந்த வகையில் ATLAS+ எமது அட்டாளச்சேனை கோட்ட கல்வி வலயத்தினை மையப்படுத்தியதாக அமைவதில் கல்விச் சமூகம் பெருமிதம் கொள்வதுடன் ஒத்துழைப்புக்களுக்கு AU Lanka மற்றும் ChildFund Sri Lanka நிறுவனங்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்”.  
AU Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மு.  கஜேந்திரன் தனது உரையில் “அட்லஸ் பிளஸ் பயிற்சியானது தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு செயற்திறன் மிக்க கற்றல் கற்பித்தல் அணுகு முறை (ATLAS); நுட்பங்களுடன் மானப்பாங்கு மாற்றத்தினை நோக்கியதான பயிற்சிகளையும் அதே வேளை பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் மூலமாக பெற்றோர் மற்றும் பாராமரிப்பாளர்களுக்கான மானப்பாங்கு மாற்றம் தொடர்பான பயற்சிகளை உள்ளடக்கியதாக இப் பயிற்சி அமைகின்றது. அதன் மூலமாக மாற்றத்தினை நோக்கிய கல்வி முன்னேற்றதினை அடைவதன் மூலமாக மாணவ மாணவிகளின் கல்வி, உளவியல் மற்றும் சிறுவர் பாதுகாப்பு போன்றவற்றிற்கு பாரிய காத்திரமான பங்பளிப்பினை நல்கும் என தெரிவித்தார்”.