இரண்டாவது இடத்தில் பின்லாந்தும், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூரும், நான்காவது இடத்தில் நியூசிலாந்தும் உள்ளன. மொத்தம் 180 நாடுகள் இந்த ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அரசு நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து நிபுணர்கள் வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு 2024 ஆம் ஆண்டுக்கானது. 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் ஊழல் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 93 வது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3 இடங்கள் பின்தங்கி இந்தியா 96 வது இடத்துக்கு சென்றுள்ளது. அண்டை நாடுகளை பொறுத்த அளவில் பாகிஸ்தான் 135 வது இடத்திலும், இலங்கை 121 வது இடத்திலும் உள்ளன. வங்கதேசத்தில் ஊழல் மிக அதிகமாக காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த நாடு 149 ஆவது இடத்தில் உள்ளது சீனாவுக்கு 76 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.