கனடியத் தமிழர் பேரவையையின் ஒழுங்கு படுத்துதலில் மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் கனடா -மட்டக்களப்பு நட்புறவுப்பண்ணையில் முருங்கை பதனிடும் ஆலை 2025.02.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மாலைஅணிவித்து வரவேற்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து
மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் - (காணி) திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன்,
வடக்குக் கிழக்குப் பொருளாதார மேம்பாட்டு நடுவத்தின் இயக்குநர் திரு. யோகேஸ்வரன் மயில்வாகனம் -
கனடியத் தமிழர் பேரவவையின் முன்னாள் இயக்குனர் மற்றும் கொடையாளர் சுரேஸ் முத்தையா ,
கொடையாளர் மூர்த்தி ,
- EARN LANKA இயக்குனர் திரு சதீஸ்,
விமலநாதன் மதிமேனன் - செயலாளர் மதிப்பிற்குரிய பாரளுமன்ற உறுப்பினர்
சாணக்கியன் இராசமாணிக்கம்,
தியாகராசா சரவணபவன் - முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் ,
துரைரத்தினம் இராசலச்சுமி துசியந்தன் - கனடியத் தமிழர் பேரவையின்
இலங்கைக்கான மனித நேயப் பணிகளுக்கான இணைப்பாளர்,
திரு. அனுராஜ் - தொழிலதிபர் மற்றும் ஊடகவியலாளர்,
ஆகிறோர் மங்கள விளக்கேற்றிச் நிகழ்வை சிறப்பித்தனர்.,
திரு. அன்ரன் துரைராஜா - கனடியத் தமிழர் பேரவவையின் நிறைவேற்று இயக்குனர்,
மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் - (காணி) திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன்,
வடக்குக் கிழக்குப் பொருளாதார மேம்பாட்டு நடுவத்தின் இயக்குநர் யோகேஸ்வரன் மயில்வாகனம்,
தியாகராசா சரவணபவன் - முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்,
விமலநாதன் மதிமேனன் - செயலாளர் மதிப்பிற்குரிய பாரளுமன்ற உறுப்பினர்
சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் ரிப்பன் வெட்டி
தொழிற்சாலைக் கட்டத்தைத் திறந்து வைத்ததோடு இயந்திரங்களையும் இயக்கி
வைத்தனர்.
கனடியத் தமிழர் பேரவவையின் இலங்கைக்கான மனித நேயப் பணிகளுக்கான இணைப்பாளர் திரு. துரைரத்தினம் இராசலச்சுமி துசியந்தன் தொடக்க உரையை நிகழ்த்தினார்
வடக்குக் கிழக்குப் பொருளாதார மேம்பாட்டு நடுவத்தின் இயக்குநர் திரு. யோசேஸ்வரன் மயில்வாகனம்,
தியாகராசா சரவணபவன் - முன்னாள் மட்டக்களப்பு நகர பிதா,
திருமதி முகுந்தன் - மேலதி மாவட்டச் செயலாளர் காணி ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
விமலநாதன் மதிமேனன் - செயலாளர் மதிப்பிற்குரிய பாரளுமன்ற உறுப்பினர்
சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தியை அவையினருக்கு தெரியப்படுத்தினார் .

ஆலை திறப்பு விழாவுக்கு வருகை தந்த விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் சுமார் 70 பயனாளர்களுக்கு வீட்டுத் தோட்ட முறையில் பயிரிட்டுப் பயன் பெறக்கூடிய வகையில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன .
பயனாளர்களிடமிருந்து இம் மரங்களிலிருந்து பெறப்படும் இலைகளை சந்தை
விலையிலும் அதிக விலைக்கு வாங்கும் திட்டத்தை கனடா- மட்டக்களப்பு நட்புறவுப்
பண்ணை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது
இன்று திறந்து வைக்கப்பட்ட பதனிடும் ஆலை கிழக்கு மாகாணத்தில் வேறெங்கும்
இல்லாத சேவைகளை விவசாயிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கக்கூடிய வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது .
கொட்டும் மழையிலும் திறப்பு விழாவுக்கு பயனாளர்கள் , பொது மக்கள் , நலன் விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர் .
கூடிய விளக்கங்களுக்கு
துசியந்தன் - 074 015 8100