அர்ச்சுனா எம்.பிக்கு பிரச்சினை இருக்கின்றது, அவரை மருத்துவரிடம் அனுப்புங்கள்- ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர

 


 

 அர்ச்சுனா எம்.பியின் தலையில் பிரச்சினை இருக்கின்றது என்றும், அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புமாறும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சிறப்புரிமை பிரச்சினை முன்வைத்து அர்ச்சுனா எம்.பி உரையாற்றும் போது அவரால் முன்வைக்கப்பட்ட சில கருத்துக்கள் தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே தயாசிறி ஜயசேகர எம்.பி இவ்வாறு கோரிக்கை விடுத்தார். 

தயாசிறி ஜயசேகர அதன்போது மேலும் கூறுகையில், இவரின் (அர்ச்சுனா எம்.பியின்) செயற்பாடுகள் தொடர்பில் எங்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. இவர் உங்களை நோக்கி (சபாநாயகரை) வெட்கம் என்று கூறுகின்றார். அத்துடன் சிறுபான்மைக்கு எதிரான விடயம் என்றும் கூறுகின்றார்.

 இங்கே சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகள் கிடையாது. இங்கே சிறுபான்மை என்று நாங்கள் எவரையும் கதைத்ததில்லை. இதனை செய்யவிட வேண்டாம். இவருக்கு தலையில் பிரச்சினை உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள் என்றார்.