மட்டக்களப்பின் பெயரை உடம்பில் பச்சை குத்திய வெளிநாட்டவர்- வைரலாக புகைப்படம் .



மட்டக்களப்பு மண்ணை   நேசிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் தனது   உடம்பில்  மட்டக்களப்பு என தமிழிலும் சில படங்களையும் பச்சை குத்தியுள்ளார்..

இதனை மட்டக்களப்பு நகரில் அவதானித்த அ.நிதான்சன் எனும் இளைஞன் அவருடன் உரையாடியது தொடர்பாக தெரிவிக்கையில்,

கையில் ‘மா’ எழுத்து தனியே பொறிக்கப்பட்டதை கண்டு தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டது தொடர்பில் வினவினேன்.உடனே கையை முழுமையாக காட்டினார்.
 தனக்கு இலங்கையில் பிடித்த இடம் மட்டக்களப்பு,ஹட்டன்,காலி மூன்று இடங்களையும் நான் என் உடலோடு கொண்டுள்ளேன் என்றும் அத்தோடு விசேட அம்சமாக ஒரு நர்த்தன விநாயகரும் அதனை சின்னப் பிள்ளையார் எனக் குறிப்பிட்டுள்ளது,  எம்பெருமான் நடராஜர் கோலத்திலும் பச்சையாக((tattoos)) குத்தியுள்ளார் என்றார்.