உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத்தலைவர் அதி வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மகாராஜ் மட்டக்களப்பு விஜயம்






















 மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு வருகைதந்த அவரை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம்,இராமகிருஸ்ணமிசன் பொதுமுகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் உட்பட சுவாமிகள், நூற்றாண்டு விழா சபையினர் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகிலிருந்து சுவாமிக்கு மாபெரும் வரவேற்பு ஊர்வலம் நடைபெற்றது.

மாணவர்களின் கலை நிகழ்வுகள்,சுவாமி விபுலானந்தா அழகில் கற்கைகள் நிறுவகத்தின் இனியம் இசைக்குழுவினர் இன்னிசையுடன் பெருமளவான மக்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

கல்லடி ராமகிருஸ்ண மிசன் வரைக்கும் இந்த வரவேற்பு ஊர்வலம் பிரமாண்டமுறையில் நடைபெற்றதுடன் வழியெங்கும் நிறைகுடங்கள் வைக்கப்பட்டு சுவாமிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

ராமகிருஸ்ண மிசனில் உள்ள ராமகிருஸ்ணர் ஆலயத்தில் விசேட பூஜைகளிலும் கலந்துகொண்ட சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

இந்த நிகழ்வில் ராமகிருஸ்ணமிசனின் சுவாமிகள் மற்றும் இராமகிருஸ்ண மிசன் நூற்றாண்டு சபையின் உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஸ்ண மிஷனின் துணைத்தலைவர் ஆதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜீ மஹராஜ் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.