மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தொழில் முயற்ச்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் வெள்ளிக் கிழமை இடம் பெற்றது.
கிரிசலிஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் சமூக நல்லிணக்கம், சமாதானம், பொருளாதாரத்தை வலுவடைய செய்வதனை நோக்காக கொண்டு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகம், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் கிரான்பிரதேச செயலக பிரிவுகளில் ஆரம்பக்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குமான செயற்திட்டத்தினை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம் பெற்றது.
இப்பிரதேசத்தில் வாழ்கின்ற தெரிவு செய்யப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் சமூக அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் இதன்போது உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
UN Women நிறுவனம் மற்றும் FISD நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் பால் நிலை சமத்துவத்தை நிலைநிருத்துவதை இத்திட்டம் நடைமுறைப்படுத்தி
வருகின்றத குறிப்பிடத்தக்கதாகும்
இக்கலந்துரையாடலின் போது இலங்கை பெண்கள் பணியக பணிப்பாளர் சஜிவினி பேரோரா, ஐக்கிய நாடுகள் பெண்கள் நிறுவன பணிப்பாளர் சனோன், சிறுவர் நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருணாளினி சந்திரசேகரம், திட்டமுகாமையாளர் ஜெகதீபன், சிரேஸ்ட திட்ட உத்தியோகத்தர் ஜவாகிர் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.