மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிருவாக சபைக் கூட்டம் இன்று (15) திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் செயலாளர் அகில இலங்கை சமாதான நீதிவான் துரைராஜா லெட்சுமிகாந்தன்
அவர்களின் ஏற்பாட்டில் மையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய
சாமஸ்ரீ தேசமானிய உதயகுமார் உதயகாந்த் தலைமையில் இடம்பெற்றது.
கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற குறித்த முதலாவது நிருவாக சபைக் கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மௌன இறை வணக்கத்தைத் தொடர்ந்து, சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் கொடி மையத்தின் தலைவரால் ஏற்றப்பட்டு, அனைவராலும் உறுதியுரை நிகழ்த்தப்பட்டதனைத் தொடந்து கூட்டம் ஆரம்பமாகியது.
முதல் நிகழ்வாக தலைவர் உள்ளிட்ட மீயுயர் பீட உறுப்பினர்களினால் நிருவாக சபை உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதமும், மையத்தினால் வழங்கப்படும் சமாதான நீதிவான்களுக்கான அடையாள அட்டையும் வழங்கிவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த கூட்டறிக்கை செயலாளரினால் வாசிக்கப்பட்டடு அங்கீகரிக்கப்பட்டு, பொருளாளரினால் கணக்கறிக்கை சபைக்கு சமர்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தலைவரின் தலைமையுரை இடம் பெற்றதுடன், கடந்தகாலத்தில் அமுல்படுத்தப்பட் திட்டங்கள், எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த காலங்களில் சங்கத்திற்காக பாடுபட்டு சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்த மையத்தின் செயலாளர் தேசகீர்த்தி சமூகஜோதி துரைராஜா லெட்சுமிகாந்தன் அவர்களை தலைவர் உள்ளிட்ட மீயுயர் பீட உறுப்பினர்களினால் கௌரவிக்கப்பட்டமையினை தொடர்ந்து, செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.
இந்நிகழ்வில் உபதலைவர் எம்.வை.ஆதம், பொருளாளர் ஆயுள்வேத வைத்தியர் சபாரெத்தினம் சுதர்சன்,
உபசெயலாளர் கலாநிதி அருணாசலம் செல்வேந்திரன், நிருவாக சபை உறுப்பினர்களான இ.கோமளேஸ்வரி,
கே.சதீஸ்க்குமார், ரீ.தயானந்தம், கே.தவராசா, கே.நடேசன், எம்.எஸ்.அகமட் லெவ்வை, எம்.எஸ்.எம்.நசீர், கே.தங்கராசா, ஈ.சீதாராமன், எம்.எம்.அகமட் சின்னலெவ்வை, என்.நவதாசன் ஆகியோர் கலந்து கொண்டு தமது ஆலாசனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.