கடந்த ஒரு மாத காலமாக மின்சார வசதியின்றி இருளில் மூழ்கியுள்ள விவசாய கிராமம் காட்டு யானை அச்சுறுத்தலால் அங்கிருந்து வெளியேற தயாராகும் மக்கள்


 


 

 



  வரதன்

 

 

 

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு  கிரான் பிரதேச செயலர் பிரிவு பெரிதும் பாதிக்கப்பட்டது

 இதனால் அங்கு வசிக்கும் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றியும் போக்குவரத்து பாதைகள் சேதமடைந்து காணப்பட்டதுடன் இரவு வேலைகளில் காட்டு யானை அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்


இதேவேளை தற்போது அப்பகுதியில் பெரும் போக வேளாண்மை அறுவடை மேற்கொண்டு வருவதன் காரணமாக விவசாயிகள் இரவு வேலைகளிலும் தங்களது பணிக்காக சென்று வரும் வேலை  வெள்ள அனர்த்தத்தினால் சேதம் அடைந்த மின்சார கம்பங்கள்

 கடந்த ஒரு மாத காலமாக   திருத்தப் பணிகள் மேற்கொண்டு மின்சார வசதி வழமை
நிலைக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட வர்கள் முயற்சி எடுக்காமையினால்

 பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஒரு மாத காலமாக உயிர் அச்சுறுத் துக்களுக்கு மத்தியில் இரவு வேலைகளை கழிக்க வேண்டி உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்

இங்குள்ள மக்கள் விவசாயம் மீன்பிடி கால்நடை மேட்டினில பயிர் செய்கை  என்பன தமது வாழ்வாதார கொண்டுள்ள போதிலும்

 கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி வெட்டை கானந்தனை பகுதி கிராம மக்களே இவ்வாறு மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்

இதனால் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதாரப் பிரச்சினைகளும் தற்போது எழுந்துள்ளன எனவே

 இவ்விடயம் சம்பந்தமாக மக்கள் பிரதிநிதிகள் கவனம் எடுக்க வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்போது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்