புலம்பெயர் தமிழ்மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 


பிரித்தானியாவில் (UK)இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரித்து புலம்பெயர் தமிழ்மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்றைய தினம் (04.02.2025) பிரித்தானியாவில் உள்ள

இலங்கை தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கீழ் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு, பிரித்தானியாவின் இலங்கை தூதரகத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கொடியும் ஏற்றப்பட்டுள்ளது. 

இதேவேளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் சிறிலங்காவின் சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.