கடந்ந 15 வருடங்களுக்கு மேலாக களுவாஞ்சிகுடியில் சிங்களம் கற்பித்து பல ஆசிரியர்களையும், மாணவர்களையும் உருவாக்கிய திருமதி. பு. சுகிர்தவாணி அவர்களின் கனவான சத்தர மொழிகள் நிலையம் 2025-02-02 அன்று காலை 10.30 மணியளவில் பிரதி அதிபர் (மட்/ பட்/பட்டிருப்பு ம. ம. வி தேசிய பாடசாலை) திரு. T. ஜனேந்திரராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுடன் மட்/ பட்/ பட்டிருப்பு ம. ம. வி தேசிய பாடசாலை உதவி அதிபர் திரு. S . ஜீவராஜ், மட்/ சிவானந்தா பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர் திரு. மு. குமாரசிங்கம், மட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயம் திரு. அருள்ராஜா, களுவாஞசிகுடி சைவ மகா சபை தலைவர் திரு. மு. யோகநாதன் (ஓய்வு பெற்ற மக்கள் வங்கி கணக்காளர்), எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் அதிபர் திரு. S. தீபதர்சன் களுவாஞ்சிகுடி கூட்டுறவு சங்க தலைவர் திரு. வினோராஜ் அவர்கள் மற்றும் வரை/ கல்விச் சேவை ஊழியர்களின் சிக்கனக் கடனுதவிச் சங்கப் பிரதி முகாமையாளர் திரு. தினுஸ் டிலான் குணவர்த்தன அவர்களும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து இந் நிகழ்வை சிறப்பித்தனர்.
களுவாஞ்சிகுடி, எருவில் இரு பிரிவுகளிலும் கற்கும் மாணவர்களின் பாடல், நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன ; புதிய மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர் .