வரதன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக அறுவடை போது எதிர் பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லை, பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வும் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் அதற்குரிய நஷ்ட ஈடுகளை தந்து தவுமாறு விவசாயிகள் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் பெரும்போக வேளாண்மை செய்கை அறுவடை போது விவசாயிகள் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தினால் அதற்குரிய நஷ்ட ஈடுகளை தந்து தவுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர் , அண்மையில் ஏற்பட்ட அடை மழை மற்றும் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாகவும் எதிர் பார்த்த அறுவடை கிடைக்காமல் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளில் கருத்த புள்ளகள் மற்றும் இடை குறைவாக அதிகம் பதறாக காணப்பட்டு இருப்பதன் காரணமாகவும் இம்முறை எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லை எனவும் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை தந்து உதவுமாறு இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்
கடந்த வருடம் ஏக்கருக்கு 30 மூடைகள் கிடைத்த போதும் தற்போது 15 மூடைகள் அளவில் கிடைப்பதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். தாம் வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடைகளில் வயலுக்கு அடிப்பதற்கான எண்ணெய்களை கடன்களில் பெற்ற போதும் தற்போது அதற்குரிய அறுவடை லாபத்தினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் எனவே ஜனாதிபதி விவசாயிகளின் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு தங்களுக்குரிய இழப்பீடுகளை தந்து உதவுமாறு இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும் போக அறுவடை முன்னெடுக் கப்பட்டு வருகின்ற போதிலும் அண்மை காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மற்றும் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக தற்போது விவசாயிகள் எதிர்பார்த்த அறுவடை கிடைக்கப்பெறவில்லை எனவும் வயல்கள் ஈரமாக காணப்படுவதனால் அறுவடை செய்வதில் பெருத்த சிரமங்களை எதிர்கொள்வதாகவும் போது படுவான் கரை பகுதிகள் விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபட்டு கொண்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளதுடன் வியாபாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் வந்து தங்களுக்கு வேண்டிய அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.