வீதியில் நடந்து செல்லவோ அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

 

 


நாட்டில் கொலைகள் அதிகரித்துள்ளதால், வீதியில் நடந்து செல்லவோ அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதுக்கடை நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவிக்கையில்,

மேலும், “சட்டம் ஒழுங்கில் கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது. தினமும் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. சிறு குழந்தைகள் கூட கொல்லப்படுகிறார்கள்.

இதைவிட ஒரு வலுவான தீர்வு இதற்குப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம். இன்று, ஒருவர் வீதியில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று ஒருவர் நீதிமன்றத்திற்குக் கூட செல்ல முடியாவிட்டால், அது ஒரு பாரியப் பிரச்சினையாகும். சட்டம் ஒழுங்கு தொடர்பாக முடிந்தவரை வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கொலை, வன்முறை, ஊழல் ஆகியவை நடக்க முடியாது. அரச அதிகாரம் இன்று உங்கள் கைகளில் உள்ளது” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.