சைவத்தையும் தமிழையும் ஒருங்கே இணைத்து வளர்த்த பெருமை நாவலர் பெருமான் பிறந்தது அந்த யாழ் மண்ணுக்கு சிறப்பு.

 


அண்மையில் வியட்நாம் danang நகரில் 2025 ஆம் ஆண்டுக்கான பெப்ரவரி 21, 22 தினங்களில் தமிழ்நாடு சித்தர் முனைவர் திருத்தணிகாசலம் தலைமையில் மாநாடு இடம்பெற்றது. இதன் பொழுது இலங்கையில் இருந்து சென்ற குழுவில் முன்னாள் ஜனாதிபதியின் இணைப்பாளர் ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மாவும் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினார்.

இதன் போது தனது வாழ்த்துரையில் “நல்லை நகர் நாவலர் இன்றேல் சொல்லு தமிழ் எங்கே தூய தமிழ் எங்கே” என்று தமிழுக்கு பெருமை சேர்த்தவர் என்பதை உலகம் அறியும். தமிழுக்கு மட்டுமல்ல சைவத்தையும் தமிழையும் ஒருங்கே இணைத்து வளர்த்த பெருமை நாவலர் பெருமான் பிறந்தது அந்த யாழ் மண்ணுக்கு சிறப்பு என்று தனது வாழ்த்துரைத்தார். அந்த நாவலர் பிறந்த மண்ணில் தான் பிறந்ததை யிட்டு பெருமை கொள்வதாகவும் பாபு சர்மா தனது வாழ்த்துரையில் தெரிவித்தார். நாவலரின் பெருமைகளை தமிழ் மக்களாகிய நாங்கள் யாரும் மறக்கவே கூடாது என்பதை ஆணித்தனமாக சபையில் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழ் மீது கொண்ட பற்றினால் தமிழ்த்தாயின் அரவணைப்பினால் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் உணர்வுடன் நாங்கள் ஒன்று சேர்வதற்கு இந்த மாநாடு நிச்சயம் பெரும் பங்காற்றும் என்பதில் ஐயமில்லை என்பது குறித்தும் தனது வாழ்த்துரையில் தெரிவித்திருந்தார். வாழ்த்துரை நிகழ்த்திய பாபுசர்மாவிற்கு வைத்தியர் திருத்தணிகசலம் மலர் கொத்து வழங்கி கௌரவித்திருந்தார்.