
அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊடகப் பிரிவும இணைந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வை( 26.02.2025) முன்னெடுத்து இருந்தது
மட்டக்களப்பு தகவல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பழைய கச்சேரி மண்டபத்தில் 27/02/2025 அன்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீ கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தகவல் திணைக்கள பணிப்பாளர் எச்.எஸ் ஜே பண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் கச்சேரி உயர் மட்ட அதிகாரிகளும் மட்டக்களப்பு கச்சேரி ஊடகப் பிரிவின் அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 10 சிரேஷ்ட்ட ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டதோடுஊடக தடம் என்னும் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது