அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள
பிரதேச சிவில் அமைப்புகள், இளைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பெண் தலமைத்துவத்தினை கொண்ட சமூகம் நீதிக்காக போராடும் சமூகம் என பல தரப்பட்ட சமூகங்கள் இவ் நில அபகரிப்புகளாலும் தனது வாழ்வாதாரத்தினை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் சட்ட ஆலோசகர்கள் பிரதேச அமைப்பாளர்களுடன் கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தி அவர்களின் ஊடாக மக்களுக்கு முறையான தெளிவூட்டல் சென்றடைவதற்கான வழிமுறைகளை கையாள்வதற்கு துறை சார்ந்த வளவாளரின் கருத்துரைகள் வழங்கப்பட்டதோடு மட்டக்களப்பு மாவட்ட பிரதேசத்தில் உள்ள பொதுமக்களும் உள்வாங்கப்பட்டதை அடுத்து இந்த செயலமர்வு மட்டக்களப்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இந்நிகழ்வு 18/02 /2025 இடம் பெற்றது.
தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தினை இழந்து வரும் நிலையில், காணி அபகரிப்பு தொடர்பான பிரதேசத்தின் குறைபாடுகள் பிரதேச கிராம மட்டத்தில் உள்ள நில அபகரிப்புகள் பற்றிய தெளிவூட்டல் ஆராயப்பட்டதுடன் பிரதேசத்தில் உள்ள குறைபாடுகளும் கேட்டறியப்பட்டது.
இந்நிகழ்வு அகம் மனிதாபிமான வளநிலைய பிரதி இணைப்பாளர் ஏ. மதன் தலைமையில் இடம்பெற்றதுடன் கள இணைப்பாளர் ப. சிரோஜன், நிறுவனத்தின் உதவிக் கணக்காளர் செல்வி. கு. சஞ்சலிதா, ஊடகவியலாளர்கள் சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் நிறுவன இணைப்பாளர் தி.கிருசாத், மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் சிவில் அமைப்புகள், மற்றும் சட்ட ஆலோசகர் சந்திரகுமார், முன்னால் உதவிக்காணி ஆணையாளர் ரவி ராஜ் இச் செயலமர்வின் வளவாளராக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.