விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்களது பொழுது போக்கினை கழிக்கும் சுற்றுலா இடமாக ஆரையம்பதி கடற்கரை காணப்படுகின்றது.பிரதேச மக்கள் மாத்திரமல்ல வெளியூர் மக்களும் கடற்கரைக்கு வருகைதந்து பொழுதை கழிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது .
கடற்கரை ஓரங்களில் கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் பரவிக்கிடப்பதனால் தனது பொழுது போக்கினை கழிக்க வரும் பொதுமக்கள் பல்வேறு அசோகரியங்களை எதிர்நோக்கி வருவதோடு கழிவுப்பொருட்களால் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளும் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர் .
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் க்ளீன் ஶ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டமானது இலங்கை முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் ஆரையம்பதி பிரதேச சபை இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாது பாராமுகமாக இருப்பதாக பொதுமக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு குப்பை தொட்டிகளை பொருத்தமான இடங்களில் வைப்பதால் கடற்கரைக்கு வரும் பொது மக்கள் கழிவுகளை தொட்டியில் போடுவதற்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்
ஆரையம்பதி பிரதேச சபையின் பொறுப்பு கூறவல்ல அதிகாரிகள் தாமதிக்காமல் கடற்கரையை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கையினை ஆரம்பித்து , ஆரையம்பதி ஊரின் பெயரையும் பெருமையையும் காப்பாற்ற முன்வர வேண்டும் என நலம் விரும்பிகளும் , சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .