ரம்புக்கன
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்சலக்முவா பகுதியில் சட்டவிரோதமான முறையில்
அசெம்பிள் செய்யப்பட்ட காரை வைத்திருந்த 50 வயதுடைய நபர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வுப்
பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினர் (STF
கேகாலை முகாம்) 13ஆம் திகதி இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
வாகனத்தில்
செல்லுபடியாகும் பதிவுச் சான்றிதழ் இல்லை என்பதையும், அதன் அடையாளம்
சரிபார்க்கப்படவில்லை என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
ரம்புக்கனை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ரம்புக்கனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்