வரதன்
நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று கிழக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது
மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதான சுதந்திர தின நிகழ்வு புதிய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் தலைமையில் இடம் பெற்றது
நாட்டின் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதன் பின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது அதன் பின் நாட்டின் சமாதானத்திற்காக உயிர் நீத்த படைவீரர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரினால் சுதந்திர தின சிறப்புச் செய்தியும் இங்கு இடம் பெற்றது
மாவட்ட செயலக பதில் அரசாங்க அதிபர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் ஊழியர்கள் என பலரும் இந்த சுதந்த…
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தினால் விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் மாவட்ட அரசாங்க அதிபரினால் இங்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட அரசாங்க அதிபரினால் மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயன் தரும் மரக்கன்றுகளும் இங்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்