மாற்றுத் திறனாளி பெண்களை தொழில் ரீதியாக முன்னேற்றுவதற்கான துணி பேக் தயாரிக்கும் நிலையம் வெருகலில் திறந்து வைக்கப்பட்டது.

 

தர்மினி -சமூகம் மீடியா




திருகோணமலை -வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளி பெண்களை தொழில் ரீதியாக முன்னேற்றுவதற்கான துணி பேக் தயாரிக்கும் நிலையம் (24) வெருகலில் திறந்து வைக்கப்பட்டது.

YMCA அமைப்பு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொலித்தீன் பாவனையை தடைசெய்து துணி மூலம் தயாரிக்கும் பேக்குகளை தயாரிக்கும் ஒருமாத கால பயிற்சியை வழங்கி பின்னர் வெருகல் பிரதேசத்தில் இந்த பயிற்சி நிலையத்தை திறந்து வைத்துள்ளது.

தொழில் ரீதியாக மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், YMCA அமைப்பின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.