மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மின்சாரசபை அறிவித்துள்ளது .

 


இன்று முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தன.

இதன் காரணமாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சுழற்சி முறையில் ஒன்றரை மணி நேர மின் விநியோகத் தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு நேரிட்டது.

நேற்று பிற்பகல் வரை செயற்படாமல் இருந்த மின்பிறப்பாக்கிகள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மின் விநியோகத் தடையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.