பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் முத்திரை பதித்து, செயலாளர் கையொப்பமிட்டதாக போலியாக தயாரிக்கப்பட்ட கடிதமொன்றினூடாக, நாடு பூராகவும் இன்று (14) பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்ற போலி பிரசாரம் ஒன்று சமூக ஊடகங்களின் ஊடாக பரவி வருகின்றது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவற்றை சமூக ஊடங்களில் பரப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.