தேசத்தின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் சுதந்திர தினக் கொண்டாட்டம் 04.02.2025ம் திகதி முற்பகல் 09 மணியளவில் செவ்வாய்க் கிழமை ஓட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் அமையப் பெற்றுள்ள டைவர்ஸ் பார்க்கில் முப்படையினர், பொலிஸார் மற்றும் சர்வமதத் தலைவர்கள் பங்கு பற்றுதலுடனும் ஆசியுடனும் மிகவும் கோலாகலமாக தேசியக் கொடி ஏற்றல், தேசியக் கீதத்துடன் இடம்பெற்றது.
டைவர்ஸின் தலைவர் விஷேட சுழியோடி கபீர் பௌஸ்தீன் அவர்களின் வழிகாட்டுதலுடன் அனர்த்த அவசர உதவிப்பிரிவின் தலைவர் எம்.எம். முபாறக் ஹாஹியார் தலமையேற்று பொதுச் செயலாளர் ஏ.எல்.எம். சதாம் அவர்களின் நெறிப்படுத்தலுடன் மிகவும் கோலாகலமாக இடம் பெற்ற இம் மாபெரும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக தரவிக்குளம், தொப்பிகல 232 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேர்ணல் ஆர்.ஆர்.சீ.கருணாரத்ன (RWP) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அத்துடன், விஷேட அதிதிகளாக SLNS கஜபா படைப்பிரிவு அதிகாரி கமாண்டர் திரு நவரத்ன பண்டார, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு லசந்த பண்டார, விமானப்படை அதிகாரி திரு மதுரங்க, சிறப்பு அதிதியாக கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஏ.தாஹிர் மற்றும் உலமாக்கள், கல்விமான்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வுகள் முப்பெரும் நிகழ்வுகளாக ஒழுங்கமைக்கப்பட்டு மூன்றிடங்களில் இடம்பெற்றன.
இதில் பல நிகழ்வுகளை மூவ் கல்குடா டைவர்ஸின் உயிர்காப்பு பயிற்சிப் பொறுப்பாளர் இப்றாஹீம் மாஸ்டர் மற்றும் டைவர்ஸின் ஆலோசகர்களில் ஒருவரான அலீம்தீன் ஆகியோர் ஒழுங்கு செய்திருந்தனர்.
இந்நிகழ்வுகளில்…
தோணியோட்டம், முதலுதவிப் பயிற்சி, கௌரவிப்பு நிகழ்வு என்பனவும் டைவர்ஸ் பார்க்கில் இடம்பெற்றதுடன், மூவ் கல்குடா டைவர்ஸ் மற்றும் தியாவட்டவான் அர்-ரஷாத் விளையாட்டுக்கழகம் இணைந்து தியாவட்டவான் அரபா வித்தியாலய மைதானத்தில் கிரிக்கெட் போட்டியினையும், முனை முன்னேற்றக் கழகத்துடன் மூவ் கல்குடா டைவர்ஸ் இணைந்து முனை பார்க் வளாகத்தில் சிறுவர் போட்டி நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது.
நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பாக நடந்தேறின.
இந் நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கு அனைத்து வகையிலும் உதவிய எமது நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது குழுமம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந் நிகழ்வுக்கு கால நேரம் பாராமல் தனது வேலை பழுக்கு மத்தியில் தனது பொன்னான நேரத்தை செலவிட்ட எமது சகோதர நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை எமது குழுமம் சார்பாக தெரிவிக்கின்றோம்.
முஜிப்
: காதர் ஷரீப்