இவ் நட்பு செயற்திட்டமானது 04.02.2025 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவு வைத்திய அதிகாரியும் அவருடன் இணைந்த அனைத்து துறை சார்ந்த உத்தியோகத்தர்களும். சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உத்தியோகத்தர்களும் மற்றும் லயன்ஸ் கழகங்கள் மற்றும் உள்ளூர் இளைஞர் கழகங்களின் தன்னார்வ ஊழியர்கள் மற்றும் பல உறுப்பினர்களுடன் டெங்குவை கட்டுப்படுத்தும் சமூக அணிதிரட்டல் நடவடிக்கை இன்று மிகவும் வெற்றிகரமாக நடை பெற்றது.
ஜனவரி மாதம் கிடைக்கப் பெற்ற டெங்கு நோயாளிகள் என அடையாளப்படுத்தப்பட்டோரின் தரவுகளுடன் நேற்று செயல் திட்டம் உருவாக்கப்பட்டது.
அவதானிப்புக்காக ஆறு வலயங்களாக பிரிக்கப்பட்டு அங்குள்ள வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் பார்வையிடவும் பதினாறு அணிகள் நிறுத்தப்பட்டன.
அனைத்து சிற்றுண்டிகளும் மதிய உணவும் லயன்ஸ் கிளப் மூலம் வழங்கப்பட்டது.
தொடர்நடவடிக்கையாக இன்னும் கூடுதலான பொதி செய்யப்பட்ட கொள்கலன்கள் நாளை 05.02.2025 துப்புரவுப் பிரிவுகளால் சேகரிக்கப்படும்.
அடயாளப்படுத்தப்பட்ட மீன் இடக்கூடிய இடங்களுக்கு மீன் இடும் நடவடிக்கையும், அடையாளம் காணப்பட்ட கிணறு மற்றும் நீர் தொட்டியை மூடுவதற்கான நடவடிக்கைகளும் இன்று 05.02.2025 வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஊழியர்களால் தொடரப்படும்.