ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிக்கடுவ கடற்கரையில் வியாழக்கிழமை (06)
காலையில் குளித்துக் கொண்டிருந்தபோது, வெளிநாட்டு பெண் ஒருவர் மற்றும்
இரண்டு ஆண்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் பணியில் இருந்த உயிர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மூன்று பொலிஸார், அந்த மூவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
விபத்தில்
சிக்கிய பெண்ணுக்கு 27 வயது, ஆண்கள் 42 மற்றும் 71 வயதுடையவர்கள் எனவும்
அவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.