மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைச்சின் செயலாளர் பி.ஏ.சி.பி. பமுனுஆராச்சியின் கையொப்பத்துடன் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுமுறை வழங்கவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மார்ச் முதலாம் திகதி பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நாளை மகா சிவராத்திரி என்பதால், பாடசாலை மாணவர்கள் நாளை மறுநாள் பாடசாலைக்குச் செல்வது கடினமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.