மதுபானப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

 


மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படாது என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் யு.எல்.உதய குமார பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிப் பேசுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அனைத்து சட்டவிரோத மதுபான நடவடிக்கைகளை ஒழிக்கவும், அரசாங்கத்திற்கான வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் கூறினார்.