சிரேஷ்ட ஊடகவியலாளரான பாரதி இராஜநாயகம் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

 


தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளரான பாரதி இராஜநாயகம் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று(09.02.2025) தனது 62 ஆவது வயதில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் அவரது வீட்டில் காலமானார்.

 அத்துடன், சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளரான இவர் சுமார் 40 வருடங்களுக்கும் மேற்பட்ட ஊடகத்துறை அனுபவத்தை கொண்டவராவார்.

தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த பாரதி இராஜநாயகம் அரசியல் ஆய்வு மற்றும் கலை செயற்பாடுகளில் மிகுந்த ஆளுமை உள்ளவராக காணப்பட்டதோடு அண்மையில் வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளராக யாழ். காரியாலய பொறுப்பு அதிகாரியாகவும் கடமை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.