வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மகிந்த ராஜபக்ச வீட்டை விட்டு வெளியேறுவார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றையதினம் (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.