பாராளுமன்றத்தில் உள்ள சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைந்து சங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த யோசனையை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்படும்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ் தரப்பினரின் உரிமையை நிலைநாட்டும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ‘இறுதி இணக்கப்பாட்டுக்கு பின்னர் உருவாக்கப்படும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்திற்கு தலைவர் ஒருவரை நியமிக்காமல், செயலாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இதேவேளை, ‘அரசாங்கத்திற்கு எதிராக எதிர்கட்சியின் சகல சக்திகளையும் ஒன்றிணைத்து செயற்பட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது’ என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கட்சிகள் சிலவற்றின் முக்கியஸ்தர்களின் பங்கேற்றுதலுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.