மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தில் இடம் பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வுகள்.











 

வரதன்




 புனித சிவராத்திரி முன்னிட்டு  நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் சீறற்ற கால நிலைக்கு மத்தியிலும் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது

 இதே வேலை சிவ அவதாரமும் மகா சிவராத்திரி சிவலிங்க தரிசனமும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை  பிரம்ம குமாரிகள் ராஜ யோக நிலைய ஆன்மீக கலைக்கூடத்தில் நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்றது
கலந்துகொண்ட அடியார்கள் அதிதிகளுக்கு சிவலிங்க தரிசனம் இடம்பெற்றதை தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பமாகியது இதில் மங்கள விளக்கேற்றல் இறைவணக்கம் வரவேற்பு நடனம் வரவேற்புரை தலைமையுறை என்பன இடம்பெற்று சிவ நடன ஆற்றிகைகள் என கலை கலாச்சார நிகழ்வுகளும் இங்கு இடம் பெற்றது

 இடம் பெற்ற  நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் M. கோபாலரட்ணம் கலந்து கொண்டார் மற்றும்

 வைத்திய சுகாதார அதிகாரிகள் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பிரம்ம குமாரி நிலையத்தின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் இவு நிகழ்வில் கலந்து கொண்டனர்