காட்டு யானைகளின் அட்டகாசங்கள் தொடர் கின்றன.

 


 

 மனிதன் யானை மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும் அவற்றையும் மீறி சில அசம்பாவிதங்கள் நடைபெறாமலும் இல்லை.
அந்த வகையில்,கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாங்குளம் பகுதிக்குள் இரவு நுழைந்த காட்டு யானைகள்  தென்னை, கத்தரி முதலான பயிர்களையும் வேளாண்மைகளையும் நாசமாக்கி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.வீடொன்ரையும் துவம்சம் செய்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இதேவேளை பல தென்னை மரங்களையும்,வேளாண்மையும் நாசமாக்கி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

யானையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.