வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் சின்னவெம்பு கிரானில் மருமகனின் பொல்லால் தாக்குதலுக்கு இலக்காகி மாமனார் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொடி எட்வேட் போஸ் வயது (66) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினம் பகல் வேளை வீட்டிற்கு வந்த மருமகன் தனது மகளுடன் ஏற்பட்ட முரன்பாடு காரணமாக அவரை தாருமாறாக தாக்கியபோது அதனை தடுக்கும் முயற்சியில் ஏன் அவளை அடிக்கீறிர்கள் என தட்டிக்கேட்ட போது திடிரென அவரின் தலை மீது பொல்லால் தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
தாக்குதல் மேற்கொண்டவரை வாழைச்சேனை பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற் கூற்றாய்வின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.