நாட்டில் அதிகாரமளிக்கப் பட்டுள்ள அரச அதிகாரிகளினாலையே உயிர் அச்சுறுத்தல் உருவாகும் நிலை காணப்படுகிறது.
25.02.2025 இரண்டு மணியளவில் மட்டக்களப்பு வாகரைப்
பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம்
கட்டை பகுதிக்குச் சென்ற வனவள இலகா பிரிவினர் நீண்ட காலமாக குடியிருந்து
வரும் மக்களை அச்சுறுத்தி அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என
அச்சுறுத்தியதோடு மூன்று பேருக்கு எதிராக தகவல்களைச் சேகரித்து
சென்றுள்ளனர் வழக்கு பதிவு செய்வதற்காக.அதுமட்டுமல்லாது மூன்று
குடியிருப்புக்களையும் எரியூட்டியுள்ளனர்.இச் செயற்பாட்டினை மிக வன்மையாக
கண்டிக்கின்றோம்.
இது தொடர்பாக கேள்வியுற்று கதிரவெளியில் இருந்து சென்ற இரு சிவில் சமூக
செயற்பாட்டாளர்கள் நியாயம் கேட்டபோது அவர்களும் மிக மோசமாக தாக்கப்
பட்டதுடன் கைவிலங்கு போடப்பட்டு குற்றவாளிகளை அழைத்துச் செல்வதுபோன்று
மிகவும் கடுமையாக நடந்து கொண்டனர்.அதன் பின்னர் இருவரும்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள்
இணைப்பாளர் திரு.இசைதீன் அவர்ளிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.நாளை நேரடியாக
வந்து முறையிடுமாறு கோரியுள்ளார்.அத்துடன் மட்டக்களப்பு பாராளுமன்ற
உறுப்பினர்களான Dr.சிறிநாத் மற்றும்
ஞா.சிறிநேசன் ஆகியோருக்கும் மேற்படி விடயம் தொடர்பில் முறையிடப்பட்டுள்ளது.
மேற் கொண்டு மேற்படி மக்களின் காணி உரிமைகளுக்காக அனைத்து விதமான ஆலோசணைகள்
மற்றும் உதவிகளையும் செய்வதற்கு நாம் என்றும் ஆர்வத்துடன் உள்ளோம்
என்பதனையும் அறியத் தருகின்றோம்.
இணைப்பாளர் ச.சிவயோகநாதன்
காணி உரிமைகளுக்கான வயைமைப்பு மட்டக்களப்பு.