
வரதன்
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுகமைய புதிய அரசாங்கத்தினால் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் இடம் பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையினரினால் புதிய ஏற்றுமதியாளர்களையும் தொழில்முனைவோரையும் மேம்படுத்து வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதிகார சபையின் உத்தியோகத்தர்களுக்கு இதன் போது தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் டெக்னோ பார்க்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 4,00 மணிவரை விழிப்புணர்வு கருத்தரங்கு, சாதனையாளர்கள் அனுபவ பகிர்வு, மினி கண்காட்சி மற்றும் வணிக உற்பத்திதொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்திலிருந்து ஏற்றுமதி திறன் கொண்ட தொழில் முனைவோர் மற்றும் தொடக்க நிறுவனங்கள் வலுப்படுத்தும் நோக்கத்திற்காக இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந் நிகழ்வில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் சமீம், உதவி மாவட்ட செயலாளர் ஜி பிரணவன், மத்திய மாகண பிரதி பணிப்பாளர் ஜெயலத், மாவட்ட எற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருந்தவநீதன் ஸ்வர்னா என பலர் கலந்து கொண்டனர்