மட்டக்களப்பில் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயண முடிவிடம்" கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்





























ஜனாதிபதியின்  சிந்தனைக்கு அமைவான க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப் பயணத் தலம்" எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமானது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்   மண்முனை வடக்கு  பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன்  இன்று(16) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது  திருச்செந்தூர்,கல்லடி, டச்பார், நாவலடி, பூநொச்சிமுனை ஆகிய கிராம அலுவலர்களின் ஒருங்கிணைப்பில் இராணுவத்தினர், மாநகரசபை உத்தியோகத்தர்கள் பிரதேச மக்களின்  பங்களிப்புடன் நடைபெற்றது .

இதன் போது க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின்  மூலம் கடற்கரை யோரங்களில் அதிகளவில் காணப்பட்ட பிளாஸ்திக் பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள்  அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.